உக்ரைனில் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பலி

கீவ்:உக்ரைனில் இருந்து தானியங்களுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் காயமடைந்தார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், குய்னா – பிசாவ் நாட்டு கொடியுடன், சரக்குக் கப்பல் ஒன்று, உக்ரைனின் ஒடேசா பகுதியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. உணவு தானியங்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில், 17 மாலுமிகள் இருந்தனர்; அதில், 5 பேர் இந்தியர்கள்.

புறப்பட்ட சில மணி நேரத்துக்குள் அந்தக் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது. இதில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் காயமடைந்தார்.

இந்த தாக்குதலுக்கு நம் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Source link