உக்ரைனில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்; தடுத்து நிறுத்திய வான் பாதுகாப்பு அமைப்புகள்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தொடர் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தனது ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் கிட்டத்தட்ட 43% செயலிழந்துவிட்டது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தொடர் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். 41 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகள், 100க்கு மேற்பட்ட ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் ரஷ்ய தளங்கள் மீதான தனது தாக்குதலை தொடர்கிறது. கருங்கடலில் இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்களை ட்ரோன்கள் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த 1,450 ட்ரோன்களையும், 1,640க்கும் மேற்பட்ட குண்டுகளையும், 99 ஏவுகணைகளையும் பயன்படுத்தி உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.

Source link