மாஸ்கோ: உக்ரைன் போர் குறித்து விவாதிக்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சு நடத்துவதற்கான முன்மொழிவு ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் போர் முடிவுக்கு வரவில்லை. இரு தரப்பிலும் பரஸ்பர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குடன் முத்தரப்பு பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தொலைபேசி வழி உரையாடலின் போது புடின் இதை டிரம்பிடம் முன் வைத்ததாக கூறப்படுகிறது. வரும், நவ., 18, 19 தேதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற உள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது, இச்சந்திப்பை நடத்தலாம் என புடின் தெரிவித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுக்கு உக்ரைனை அழைக்கவில்லை.
