உண்மையாகவே திகில் அனுபவம் கிடைத்ததா? – ‘டார்க்’ திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வழக்கமாக தொடர்ந்து நிறைய திகில் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில படங்கள் தவிர பல படங்கள் நம்மை சோதிக்க தான் செய்கிறது. திகில் என்ற பெயரில் திகிலும் அல்லாமல் படமாகவும் சிறப்பாக இல்லாமல் பல படங்கள் சோதித்தாலும் சில படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி அவை உண்மையாகவே சிறப்பான படங்களாக அமைந்து நல்ல திகில் படம் பார்த்த உணர்வை கொடுக்கின்றன. தற்போது அந்த சிறிய வரிசையில் இணைய முயற்சியோடு இந்த டார்க் திரைப்படம் களம் இறங்கி இருக்கிறது. அதில் அவர்கள் இணைந்தார்களா, இல்லையா? அதேபோல் மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாக இது அமைந்திருக்கிறது. அதுவுமே இந்த திரைப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

பேய் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லாத நாயகன் அஜய் கார்த்திக் சென்னைக்கு வேலை தேடி வருகிறார். வந்த இடத்தில் அவர் வீடு தேட ஒரு பெரிய வீடு அவருக்கு சிக்குகிறது. அந்த வீட்டில் பேய் பயம் காரணமாக தங்க பலரும் யோசித்து இருக்கும் நிலையில் அவர் தயங்காமல் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டின் உரிமையாளராக கே பாக்யராஜ் கடன் சுமையால் தவிக்கிறார். அதை சரி கட்ட நாயகன் வாடகைக்கு வருகிறார். வந்த இடத்தில் எதிர்பார்ப்பது போலவே பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. அதில் சிக்கி நாயகன் விஜய் கார்த்திக் படாத பாடுபடுகிறார். உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவர் படும் பாடு பேய் பயத்தை பயத்தை அவருக்கு அதிகரிக்கிறது. நாளுக்கு நாள் பேயின் சேட்டைகள் இரவு நேரத்தில் அதிகரிக்கின்றன. அதிலிருந்து நாயகன் தப்பித்தாரா, இல்லையா? உண்மையில் அந்த வீட்டில் நடந்த அமானுஷ்ய சம்பவங்கள் என்ன? அது இறுதி கட்டத்தில் சரி செய்யப்பட்டு நாயகன் தப்பித்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் மிகவும் சாதாரண கதையாகவே இந்த டார்க் திரைப்படத்தின் கதை தென்பட்டாலும் அதை எடுத்த விதம் காட்டிய விஷயங்களும் உண்மையாகவே திகில் ஏற்படுத்தும்படி இருப்பது இந்த படத்திற்கு பெரிய ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபுவின் கதை அம்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கதையில் மிகவும் ஸ்ட்ராங்காக இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அந்த கதையை சிறப்பான முறையில் கையாண்டு உண்மையில் ஒரு நல்ல திகில் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண் கே ஜெகன். இவரின் சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை படத்திற்கு பக்கபலமாக அமைந்து பல இடங்களில் நம்மை திகிலோடு பயணம் பண்ண உதவி இருக்கிறது. படத்தில் பல்வேறு இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் பல இடங்களில் அயர்ச்சி ஏற்பட்டு வேகத்தடைகள் தென்பட்டாலும் அவையெல்லாம் மறக்கடிக்கும் படியான திகில் காட்சிகள் இருப்பது ஓரளவு படத்தை காப்பாற்ற உதவி இருக்கிறது. குறிப்பாக திகில் படம் விரும்பாதவர்கள் கூட ஓரளவு ரசிக்கும்படியான படமாக இப்படத்தை கொடுத்திருப்பது படத்திற்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

நாயகன் அஜய் கார்த்திக் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மனம் மாறும் இடங்கள் சரியான முறையில் காண்பித்து அதற்கு ஏற்றார் போல் தன் நடிப்பையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். போலீசாக வரும் நட்டி தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் அவருக்கே தெரியாது இது அவரின் கடைசி படம் என்று. இருந்தும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்கள் அவரின் கடைசி படம் என்பதாலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பார்க்கும் நிலையை அவர் நடிப்பின் மூலம் ஏற்படுத்தி இருக்கிறார். வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்றிருக்கிறார் நாயகி அஞ்சனா. மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவர் ஒரு வேலையை நேர்த்தியாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். 

மனோ ரமேஷ் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக திகில் படத்திற்கு ஏற்றார் போல் திகிலான இசையை நேர்த்தியான முறையில் கொடுத்து கவர்ந்திருக்கிறார். ரவி சக்தி ஒளிப்பதிவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. வழக்கமான கதை அமைப்பாகவே இருந்தாலும் அதே போல் பல்வேறு இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் தான் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியான முறையில் சிறப்பாக கூறி அதே சமயம் திகில் காட்சிகளையும் சிறப்பான முறையில் காண்பித்து திகில் பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல தீனியாக அமைந்து அதேசமயம் மற்ற ரசிகர்களும் ஓரளவு ரசிகம்படியான சைக்கலாஜிக்கல் திகில் கலந்து பேய் படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. 

டார்க் – திகிலானவன்!

Source link