உன்ன அழிக்க ஒருத்தன் வருவான் டா: அவ்ளோ பெரிய டைனோசர ஒரு கல்லு அழிச்சிடுச்சா? 66 மில்லியன் வருட ரகசியம்

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியையே உலுக்கி, டைனோசர்கள் உட்பட 75% உயிரினங்களை முற்றிலுமாக அழித்த விண்கல் பற்றிய புதிய சுவாரஸ்யமான உண்மைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அன்று பூமியைத் தாக்கியது மிகவும் அரிய வகையான ‘சி.ஓ கோன்ட்ரைட்’ (CO Chondrite) என்ற விண்கல் வகையைச் சேர்ந்தது என்பது சர்வதேச ஆராய்ச்சித் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வு ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழில் வெளியாகியுள்ளது.

இலவச வீடு + உறுதியான வேலை: வெளிநாட்டினரை கை கூப்பி அழைக்கும் குட்டி நாடு; எங்க இருக்கு தெரியுமா?

கண்டுபிடித்தது எப்படி?

மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தில் (Yucatán Peninsula) ‘சிக்சுலப்’ (Chicxulub) என்ற பிரம்மாண்ட பள்ளத்தை உருவாக்கிய அந்த 10 கிலோமீட்டர் அகலமுள்ள விண்கல் பற்றிய ஆதாரங்களை, அக்காலகட்ட மண்ணின் களிமண் அடுக்கில் பாதுகாக்கப்பட்டிருந்த நிக்கல் ஐசோடோப்புகளை பகுப்பாய்வு செய்து ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘சி.ஓ கோன்ட்ரைட்’ விண்கல்லின் சிறப்பு என்ன?

பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட விண்கற்களில் இந்த ‘சி.ஓ கோன்ட்ரைட்’ வகை வெறும் 5% மட்டுமே உள்ளது. இந்த விண்கல் வியாழன்  கோளுக்கு அருகில் உள்ள விண்கல் வளையத்தின் வெளிப்பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வகை விண்கற்களில் கார்பன், துத்தநாகம், நீர் மற்றும் முக்கியமாக சல்பர் மிகவும் குறைவாகவே இருக்கும்.

பேரழிவுக்கு உண்மையான காரணம் எது?

இதுவரை விண்கல்லில் இருந்த சல்பர் வாயுதான் பேரழிவுக்கு முதன்மை காரணம் என எண்ணப்பட்ட நிலையில், இந்த ஆய்வு புதிய காரணத்தை கண்டிபிடித்துள்ளது. விண்கல்லில் சல்பர் குறைவாக இருந்ததால், பேரழிவுக்கு விண்கல்லின் ரசாயனம் காரணம் அல்ல. மாறாக, விண்கல் பூமியைத் தாக்கியபோது ஏற்பட்ட அதிர்வால் வளிமண்டலத்தில் புகுந்த நுண்ணிய தூசி மற்றும் பாறைத் துகள்களே சூரிய ஒளியை முற்றிலுமாக மறைத்தன.

இதனால் பூமி கடுமையான குளிரடைந்து, காலநிலை மாற்றத்தால் தாவரங்களும் டைனோசர்களும் உணவின்றி அழிந்தன. பூமியின் வரலாற்றிலேயே மிக அரிய வகை விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதும், அது உருவாக்கிய அசுர தூசி மண்டலமே டைனோசர்களின் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததும் இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

Source link