உயிரி எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு!

பொது – தனியார் பெருநகர சென்னை பங்களிப்புடன் மாநகராட்சியின் சார்பில், செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று (20.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆலையின் செயல்பாடுகள் மற்றும் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் ஈரக்கழிவுகளைப் புதுப்பிக்கத்தக்க எரிபொருளான உயிரி – எரிவாயு ஆக மாற்றும் முழுமையான செயல்முறை குறித்து முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். 

அதன் பின்னர் முதலமைச்சர் விஜய், “சென்னை மாநகராட்சியிலும் இதர நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வீடுகளிலிருந்து குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துப் பெற வேண்டும். அவ்வாறு பிரித்துப் பெற்ற மக்கும் குப்பைகளை எரிவாயுவாக மாற்ற வேண்டும். மக்காத குப்பைகளைத் தார்ச்சாலை அமைப்பதற்கும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் குப்பைகளை அகற்றுதலை அறிவியல்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும். 

இதற்கென காலக்கெடு நிர்ணயித்து முடித்திட வேண்டும்” என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ராம்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். 

Source link