உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு; சென்னைக்கு ரெட் அலர்ட்; 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

நமது நிருபர்

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரம் அடையும். இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்; சென்னைக்கு இன்று (அக்டோபர் 18) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வானிலை மையம் விடுத்துள்ளது.

20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், மாநகராட்சி, மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இன்று (அக்டோபர் 18) மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* செங்கல்பட்டு

* திருவள்ளூர்

* நீலகிரி

* கோவை

* தேனி

ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

இன்று (அக் 18) கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி

* தென்காசி

* தூத்துக்குடி

* விருதுநகர்

* மதுரை

* சிவகங்கை

* ராமநாதபுரம்

* திண்டுக்கல்

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* திருப்பத்தூர்

* திருப்பூர்

* நாகை

* மயிலாடுதுறை

* கடலூர்

* கள்ளக்குறிச்சி

* விழுப்புரம்

* திருவண்ணாமலை

* வேலூர்

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

ஆகிய 23 மாவட்டங்களின் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

மேகவெடிப்பு அல்ல!

சென்னையில் நேற்றிரவு (அக்.17) கொட்டித் தீர்த்த அதிகனமழைக்கு மேகவெடிப்பு காரணமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. பல்வேறு இடங்களில் ஒரே இரவில் 36.34 செ.மீ வரை மிக பலத்த மழை பதிவாகி இருந்த நிலையில், மக்களிடையே எழுந்த மேகவெடிப்பு சந்தேகங்களுக்கு வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

Source link