உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இஷாவுக்கு தங்கம்; மனு பாக்கருக்கு வெண்கலம்

ஹூவாங்சு: உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கப் பதக்கமும், மனுபாக்கர் வெண்கல பதக்கமும் வென்றனர்.

சர்வதேச துப்பாக்கி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சீனாவின் ஹூவாங்சு நகரில் நடந்து வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டியில், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை ஈஷா சிங், 50க்கு 40 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் ஆவார்.

அதேபோல், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், இந்த தொடரில் 28 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

Source link