நமது சிறப்பு நிருபர்
ஆந்திரா அருகே அர்னாப் புயல் கரையை கடக்கும் போது நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது; கரையை கடக்க மேலும் 3 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ள கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘அர்னாப்’ புயல், மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. நள்ளிரவு 12.30 மணியளவில் புயலின் மைய பகுதி கரையை கடக்க துவங்கியது. அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாக மைய பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
புயல் கரையை கடக்கும் போது நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும் 3 மணி நேரம் வரை கரையை கடக்க அர்னாப் புயல் எடுத்துக்கொள்ள கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. பபத்லா, – விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே மிகத் தீவிரப் புயலாக, புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆந்திராவில் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா இடையேயான விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
புயல் நிலவரம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்திகளையோ, உண்மைக்கு மாறான கணிப்புகளையோ வெளியிடக் கூடாது என ஒடிசா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் களமிறக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
