உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல்; இடம் பிடித்த ஒரே இந்திய நகரம்

உலகின் மகிழ்ச்சியான நகரங்களில் இந்தியாவின் மிக முக்கிய மற்றும் பாரம்பரிய நகரம் இடம் பெற்றுள்ளது.  உலகின் பிரபலமான ’டைம் அவுட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த நகரம் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

வருடாந்திர உலகளாவிய ஆய்வின் ஒருபகுதியாக, இந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், சுமார் 24 ஆயிரம் உள்ளூர் மக்களிடம், அவர்களின் சொந்த நகரம் குறித்தான மதிப்பீடுகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்படி, சமூக உணர்வு, இரவுநேர வாழ்க்கை, காதல், உணவுப் பழக்கங்கள் மற்றும் நகரம் மகிழ்ச்சியைத் தருகிறதா? என்பது போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.   

இந்த கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில், உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் ’பிங்க் சிட்டி’ என்று அழைக்கப்படும் ராஜஸ்தானின் தலைநகர் ‘ஜெய்ப்பூர்’ நகரம் இடம் பெற்றுள்ளது.  

இந்தியாவின் பாரம்பரிய நகரங்களில் ஒன்றான இந்த ஜெய்ப்பூர், பசுமையான பூங்காக்கள், அழகான குடியிருப்புகள் மற்றும் அமைதியான சூழல் உள்ளிட்ட காரணங்களினால் மிகவும் பிடித்துள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இங்குச் சுற்றிப் பார்ப்பதற்கு அழகான அரண்மனைகள், வண்ணமயமான சந்தைகள் மற்றும் உணவு வேளைகளில் ’பியாஸ் கச்சோரி’ மற்றும் ’லால் மாஸ்’ போன்ற சுவையான உணவுகள் போன்றவை மிகவும் பிடித்தமானதாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துத்தளள்னர்.  

இந்த நிலையில், உலக அளவில் மகிழ்ச்சியான 20 நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர் 6 வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் பிரிட்டனின் ’பாத்’ நகரம் முதலிடத்தையும், பனாமாவின் ’பனாமா’ நகரம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.   

Source link