உலகையே வியக்க வைக்கும் பழைய நாடுகள்: இந்தியா vs எகிப்து; எது முன்னாடி வந்திச்சு?

இன்றைய உலக வரைபடத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அவற்றில் சில நாடுகள் மட்டுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றையும், கலாச்சாரத்தையும் இன்றும் அழியாமல் தங்களது அடையாளமாகப் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு மனித குல வரலாற்றின் அடித்தளமாக விளங்கும் உலகின் மிக பழமையான நாடுகளைப் பற்றி காண்போம்.

100 வருட பழைய வீட்டிற்குள் மறைந்திருந்த அறை… டின்னை திறந்ததும் கொட்டிய பண மழை; உறைந்து போன தம்பதி

எகிப்து (கி.மு. 3100)

நைல் நதிக்கரையில் மலர்ந்த எகிப்திய நாகரிகம், உலகின் பழமையான அரசுகளில் முதன்மையானது. மன்னர் மெனெஸ் மேல் மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை ஒன்றிணைத்து இந்த அரசை நிறுவினார். இன்றளவும் உலகையே வியப்பில் ஆழ்த்தும் பிரமிடுகளும், அவர்களின் பிரம்மாண்ட வம்ச ஆட்சிகளுமே இதற்குச் சான்று.

இந்தியா (கி.மு. 3300)

உலகின் இரண்டாவது மிக பழமையான தேசமான இந்தியா, சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி வேத காலம் வரை செழித்து வளர்ந்த நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. பண்டைய காலம் தொட்டே அறிவியல், ஆன்மிகம், தத்துவம் மற்றும் கலாச்சாரத்தில் உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

சீனா (கி.மு. 2070)

சீனாவின் வரலாறு ‘சியா வம்சம்’ (Xia Dynasty) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. தொடர்ச்சியான பேரரசுகளின் ஆட்சி, கண்டுபிடிக்கப்பட்ட புதுமைகள் மற்றும் தனித்துவமான பண்பாட்டினால், சீனா இன்று உலகின் மிகச் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

ஜார்ஜியா (கி.மு. 1500)

காகசஸ் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடான ஜார்ஜியா, பண்டைய ‘கோல்கிஸ்’ மற்றும் ‘ஐபீரியா’ ராச்சியங்களில் இருந்து தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியது. மிக நீண்ட திராட்சை ரச உற்பத்திக் கலாச்சாரத்திற்கும் இந்நாடு பெயர் பெற்றது.

எத்தியோப்பியா (கி.மு. 980)

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக பழமையான தேசங்களில் ஒன்றான எத்தியோப்பியா, தனக்கெனத் தனித்துவமான எழுத்து முறையையும் பண்பாட்டையும் கொண்டது. ஐரோப்பிய வல்லரசுகளால் ஒருபோதும் அடிமைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடு என்ற பெருமை எத்தியோப்பியாவுக்கு மட்டுமே உண்டு.

கிரீஸ் (கி.மு. 800)

மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் கிரீஸ், ஜனநாயகம், தத்துவம், நாடகம் மற்றும் கலையின் பிறப்பிடமாகும். ஏதென்ஸ், ஸ்பார்டா போன்ற நகரங்களின் வீரம் செறிந்த வரலாறு உலகப் புகழ்பெற்றது.

ஈரான் (கி.மு. 550)

முற்காலத்தில் ‘பெர்சியா’ (பாரசீகம்) என்று அழைக்கப்பட்ட ஈரான், பேரரசர் மகா சைரஸால் நிறுவப்பட்ட அகாமனிட் பேரரசின் மூலம் உலக அரங்கில் எழுச்சி பெற்றது. கலை மற்றும் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கிய நாடு இது.

காலப்போக்கில் பல பேரரசுகள் தோன்றி அழிந்துபோன போதிலும், இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற நாடுகள் இன்றும் தங்களது அசல் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் இழக்காமல் தக்கவைத்துக் கொண்டுள்ளன. வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவின் ஆழமான வேர்களைப் பார்க்கும்போது நமக்கு பெருமிதம் மேலோங்குகிறது.

Source link