கடந்த சில ஆண்டுகளாக உலக புவிசார் அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யா–உக்ரைன் போர், மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள், இந்தியா–பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் உலக நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலும், மக்கள் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உலகளவில் அதிக கவனத்தை பெற்றுள்ளன.
‘America First’ கொள்கையின் தாக்கம்
பதவியேற்ற பிறகு “America First” என்ற கொள்கையை முன்னிறுத்திய டிரம்ப், இறக்குமதி பொருட்களுக்கு அதிக சுங்கவரி, குடியேற்ற விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள், வெளிநாட்டுமாணவர்கள் மற்றும் விசா நடைமுறைகளில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுவது தொடர்பான நடவடிக்கைகளும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ராணுவ நடவடிக்கைகள் சர்ச்சை
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ ஈடுபாடும் சர்வதேச அளவில் விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக, ஈரான் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்க காங்கிரஸின் முன்அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதுவும் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை மீது பல கேள்விகளை எழுப்பியது.
மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் தங்கும் காலத்திற்கு புதிய வரம்புகள் விதிக்கப்பட்டதாகவும், சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2028 தேர்தலுக்கு முன் புதிய குற்றச்சாட்டு
கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அமெரிக்க தேர்தல் அமைப்பில் தலையிட முயற்சிக்கின்றன என்று குற்றம்சாட்டினார். இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2028 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
சீனாவிற்கு பெருகும் ஆதரவு !?
இந்த சூழலில் வெளியாகியுள்ள சர்வதேச கருத்துக்கணிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. 36 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 25 நாடுகளில் வாழும் மக்கள் அமெரிக்காவை விட சீனாவை அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இது உலகளவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் நிலைப்பாடு
அதே நேரத்தில், இந்தியா, ஜப்பான், தென்கொரியா, போலந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளன.
மற்றொரு தரவின்படி, 22 நாடுகளில் வாழும் மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்பை விட சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சர்வதேச தலைமைத்துவத்தின் மீது அதிக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தென்கொரியா, கானா, பெரு, அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் சிலி போன்ற நாடுகளில் மக்கள் நடுநிலையான கருத்தை பதிவு செய்துள்ளனர்.
இஸ்ரேலின் வலுவான ஆதரவு
அமெரிக்காவுக்கு அதிக ஆதரவு தெரிவித்த நாடுகளில் இஸ்ரேல் முன்னிலையில் உள்ளது. அதேசமயம், உலகின் பல பகுதிகளில் அமெரிக்காவின் பாரம்பரிய செல்வாக்குசவால்களைசந்தித்து வருவதாகவும், சீனாவின் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு வெளிப்படுத்துகிறது.
DMK இதுனால தான் தோத்துச்சு! இத மாத்துவாங்களா?
உலக அரசியலில் உருவாகி வரும் இந்த மாற்றங்கள், வரவிருக்கும் ஆண்டுகளில் அமெரிக்கா–சீனா போட்டி மேலும் தீவிரமடையக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன.
Source link
