இந்திய திரையுலகில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ராமாயணம் பார்ட் 1 திரைப்படம் முன்பதிவில் புதிய சாதனை படைத்துள்ள நிலையில், முதல் நாளிலே ரூ200 கோடி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் புராணங்களில் முக்கியமானது ராமாயணம். இந்த ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துவிட்டாலும், அடுத்தடுத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது ராமாயணம் படம் தயாராகியுள்ளது, நித்தீஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சன்னி தியோல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ராமாயணம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த படத்தின் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் வெளிநாடுகளில் முன்பதிவு மூலம் $2 மில்லியனை (சுமார் 20.50 கோடி ரூபாய்) வசூலித்துள்ளது.
ராமாயணா உலகளாவிய வசூல் – முதல் நாள் முன்பதிவு
மேலும், வடஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் உள்நாட்டு ஐமேக்ஸ் (IMAX) திரையரங்குகளில் முன்பதிவு விற்பனை புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘ராமாயணா’, படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் சீட்டுகள் சாதனை வேகத்தில் நிரம்பி வருகிறது. இதனால், ராமாயணம் திரைப்படம் உலக அளவில் ஒரு பிரம்மாண்டமான சாதனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் படம் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டின் உலகளாவிய அதிக வசூல் செய்த முதல் 10 இந்தி படங்களின் (Top 10 Openers) பட்டியலில் ராமாயணம் படம் இடம்பிடித்துள்ளது. பிரீவியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் வழக்கமான காட்சிகளையும் சேர்த்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ‘ராமாயணா’ இதுவரை இல்லாத அளவிலான ஆரம்பகால முன்பதிவு சாதனையைப் பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் $90,000, ஆஸ்திரேலியாவில் $60,000 மற்றும் பிற வெளிநாடுகளில் $400,000 வசூலித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் பாலிவுட்டின் உலகளாவிய முன்பதிவில் 10 படங்களின் பட்டியல் (உலகளாவிய மொத்த வசூல்):
துரந்தர் 2: 235.1 கோடி ரூபாய்
த்ரிஷ்யம் 3: 91.66 கோடி ரூபாய்
பார்டர் 2: 45.66 கோடி ரூபாய்
மிர்சாபூர்: 38.17 கோடி ரூபாய்
ஆவாராபன் 2: 32.61 கோடி ரூபாய்
வெல்கம் டூ தி ஜங்கிள்: 32.39 கோடி ரூபாய்
பூத் பங்களா: 31.1 கோடி ரூபாய்
காக்டெய்ல்: 24 கோடி ரூபாய்
தமால் 4: 23.29 கோடி ரூபாய்
ராமாயணா: 20 கோடி ரூபாய்
2026-ன் உலகளாவிய பாலிவுட் தொடக்கப் படங்களின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்ததன் மூலம், ரன்பீர் கபூரின் இத்திரைப்படம் ஆலியா பட் நடித்த ‘ஆல்ஃபா’ திரைப்படத்தை டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றியுள்ளது. ஒய்.ஆர்,எப் (YRF) ஸ்பை யுனிவர்ஸின் படமான ஆல்பா உலகளவில் முன்பதிவில் 17.14 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருந்தது.
இன்னும் முழுமையாக 7 நாட்கள் மீதமுள்ள நிலையில், $2 மில்லியன் மொத்த வசூலைக் (20.50 கோடி ரூபாய்) கடந்துள்ள ‘ராமாயணா’, உலகளாவிய பான்-இந்தியா ஈர்ப்பை நிரூபித்து வருகிறது. உலகம் முழுவதும் முக்கிய திரையரங்கு ஒதுக்கீடுகள் திறக்கப்படும் இறுதி வாரத்தில் முன்பதிவு வேகம் இரட்டிப்பானால், நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இத்திரைப்படம் நவம்பர் 5 அன்று உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சாதனையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
