உஷார் மக்களே!. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மிரட்ட வரும் 3 புயல்கள்!. இஸ்ரோ வார்னிங்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் (அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல்) வழக்கத்தை விட அதிக வலுவுடன் மூன்று சக்திவாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) எச்சரித்துள்ளது.

செயற்கைக்கோள் மற்றும் வானிலை ஆய்வுத் தரவுகளின்படி, கடந்த 44 ஆண்டுகளின் சராசரியைக் காட்டிலும் இந்த ஆண்டு புயல்களின் ஆற்றல் மற்றும் தீவிரம் சுமார் 83 சதவீதம் வரை அதிகரித்து, 13.06 மில்லியன் நாட்ஸ் அளவை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திரா ஆகிய கடலோர மாநிலங்களில் கடுமையான சூறாவளிக்காற்று, பெருமளவு கடல் அலைகள் மற்றும் கொட்டித்தீர்க்கும் கனமழை இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக, கடலோர மாநில அரசுகளும் பேரிடர் மேலாண்மைத் துறையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தற்காப்பு ஏற்பாடுகளையும் உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும் என இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது.

Source link