“ஊழல் அதிகரித்துவிட்டது…” – தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் சித்தராமையா!

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற் கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது. இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது.

மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, சித்தராமையா மாநில முதல்வராகவும் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். சித்தராமையாக முதல்வர் பதவியேற்று சராசரியாக 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான விவாதத்ததை டி.கே சிவக்குமார் ஆதரவாளர்கள் எழுப்பினர். அதாவது, அடுத்த முதல்வர் சிவக்குமார் இருக்க வேண்டும் என டி.கே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக கருத்து தெரிவித்து வந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

சித்தராமையாக முதல்வராகப் பதவியேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலமைச்சராக இருந்த சித்தராமையா அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின், அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அரசியலில் நுழைவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டதாலும், வயது, உடல்நிலை காரணமாகவும் இனி நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. மீதமுள்ள வாழ்நாளையும் பொதுச்சேவைக்கு அர்ப்பணிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link