குட்கா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயபாஸ்கரை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விமர்சித்துள்ளார்.
தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்து கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பதவி ஏற்கும் போது ஊழல் செய்ய மாட்டேன்.. செய்தவர்களையும் விடமாட்டேன்.. என்று கூறியிருந்தார். இது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்
ஆனால் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல் காரணமாக முக்கிய முன்னாள் அமைச்சர்களான எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் ,கடம்பூர் ராஜு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இது தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளானது.
இந்த நிலையில் தவெகவில் குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் இணைந்து இருப்பதற்கு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஊழலுக்கு எதிராக தொடர்ந்து மக்களிடம் பேசிய நம்பிக்கை உரிய முதலமைச்சராக உருவெடுத்துள்ள விஜய் தற்பொழுது அதிமுகவை சேர்ந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருக்கும் நபர்களை தனது கட்சியில் சேர்த்துக் கொள்வது அவரின் நேர்மையான ஆட்சியை பாதிக்கும்.
விஜயின் வார்த்தையின் நம்பகத்தன்மை கேள்வி குறி?
குறிப்பாக குட்கா வழக்கு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரில் குற்றம் சாட்டப்படும் முன்னாள் அமைச்சர் புதுகோட்டை விஜயபாஸ்கரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது ஊழல் அற்ற ஆற்றி என்ற விஜயின் வார்த்தையின் நம்பகத்தன்மை கேள்வி குறியாகும் என்று கூறினார்.
தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?
தொடர்ந்து பேசிய அவர் ஊழலை ஒழிப்பேன் ஊழல் வாதிகளை தண்டிப்பேன் நானும் ஊழல் செய்ய மாட்டேன் மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன் என்று கூறிய முதல்வர் விஜய் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் நபர்களை தன்னுடைய கட்சியில் இணைத்திருப்பது எந்த வகையில் ஏற்கக் கூடியது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மேலும் முதல்வராக பதவி இருக்கும் போது லஞ்சம் இல்லாத ஆட்சியை தருவேன் என்றும், அரசாங்க பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன். இந்த அவசியமும் எனக்கு கிடைக்காது என்று பேசியது மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது ஆனால் தற்பொழுது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்.
ஊழல் வழக்கில் உச்சம் தொட்டவர்
மேலும் அரசியல் வட்டாரத்தில் ஊழல் வழக்கில் உச்சம் தொட்டவர் என்று கருதப்படுகிறது. மேலும் பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று மனநிலையுடன் செயல்பட்டவர் என்ற விமர்சனங்கள் அவர் மீது உள்ளன தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாகவும் சட்ட விரோத கல்குவாரிகள் தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஊழல் கறைக படிந்த நபர்களை எல்லாம் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொள்வது, விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நிச்சயம் ஒரு பெரிய பின்னடைவுதான். ‘நேர்மையான ஆட்சி தருவேன்’ என்று அவர் சொல்லி வரும் வார்த்தைகளின் நம்பகத்தன்மையையே இது கேள்விக்குறியாக்கிவிடும் போல தெரிகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், இத்தகைய நபர்களை எல்லாம் கட்சிக்குள் சேர்த்திருக்கவே கூடாது. குறிப்பாக, ஊழலின் உச்சத்தைத் தொட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களை எல்லாம் விஜய் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கக் கூடாது!” என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் காரசாரமாகக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source link
