ஜனநாயகன் ரீமேக்கே: நாளை மறுநாள் ஜனநாயகன் ரிலீஸாகவிருக்கும் நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்த விஷயங்கள் ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. தளபதி விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரியின் ரீமேக் தான் என்பதை அவர் உறுதி செய்திருக்கிறார். பகவந்த் கேசரியை பார்த்துவிட்டு அதை ரீமேக் செய்கிறாயா என்று விஜய் சார் தான் கேட்டார். ஏற்கனவே பிங்க் ரீமேக் செய்ததால் மறுபடியும் ரீமேக் படமா என்று யோசித்திருக்கிறார் வினோத். இருந்தாலும் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் சரி ரீமேக் செய்யலாம் என பகவந்த் கேசரி படம் பார்த்திருக்கிறார் வினோத்.
பகவந்த் கேசரி படத்தை பார்த்து பயந்திருக்கிறார் வினோத். பாலய்யா ரொம்ப பவர்ஃபுல்லான ஆள். அவர் பாலய்யா யுனிவர்ஸில் இருக்கிறார். ஜெய் பாலய்யா என கடவுள் மாதிரி இருப்பவர். விஜய் சாராலும் எதுவும் செய்ய முடியும். ஜனநாயகனின் முதல் பாதியில் 50 சதவீதமும், இரண்டாம் பாதியில் 20 சதவீதமும் பகவந்த் கேசரியில் இருந்து எடுக்கப்பட்டது. பகவந்த் கேசரியை ரீமேக் செய்யணும் என்பது விஜய் சார் முடிவு, அது எப்படி வர வேண்டும் என்பது தன் முடிவு என்கிறார் ஹெச். வினோத்.
வினோத் கண்ணீர்: ஜனநாயகன் படத்திற்காக இரண்டு முறை அழுதிருக்கிறார் வினோத். பல ஆண்டுகள் கழித்து அழுததாக கூறியிருக்கிறார். ஜனநாயகன் லீக் ஆனபோது தான் மிகவும் வருத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.படம் சென்சார் சிக்கலில் சிக்கியபோது விஜய் ரொம்ப ஆதரவாக இருந்ததாக பேசியிருக்கிறார்.
பயமும், பயத்துடனான தொடர்பும் படத்தில் காட்டியிருக்கிறோம். டர்ட்டி பாலிடிக்ஸில் இருந்து பயம் வருகிறது. அதை செய்பவன் தான் வில்லன் என தெரிவித்திருக்கிறார் இயக்குநர். கால காலமாக டர்ட்டி பாலிடிசியனை வில்லனாக பார்த்திருக்கறோம். ஜனநாயகனில் அதை வித்தியாசமாக காட்டியிருக்கிறீர்களா என கேட்டதற்கு, உண்மைக்கு நெருக்கமாக காண்பிக்கிறோம். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று தமிழில் சொல்வார்கள். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது.
பொய், பொய், பொய்: இன்று சமூகத்தில் பொய்கள் பயங்கரமா இருக்கிறது. நிறைய ஐடி விங்ஸ், வார் ரூம்கள் வந்திருக்கின்றன. ஒரு பொய்யை சமாளிக்க இன்னொரு பொய் சொல்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப்போ ஒருவன் பொய் சொல்கிறான். அவன் ஜெயித்துவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
ஆப்போசிட்ல இருப்பவனால் உண்மையை பேசி ஜெயிக்க முடியவில்லை. அவனும் பொய் சொல்றான். பொய்களுக்கு இடையே சண்டை வருகிறது. ஒரு நாடே பொய்யை வைத்து உருவாக ஆரம்பிக்கிறது. பல்லாயிரம் வருஷத்துக்கு முன்பே பொய் இருந்திருக்கிறது. தொழில்நுட்பத்தால் இது கன்னாபின்னானு வளர்ந்திருக்கிறது. ரொம்ப காலமாக இவன் கெட்டவன் கெட்டவன்னு சொல்கிறோம். புதிதாக சொல்வது என்றால் உண்மையை சொல்வது தான் புதிது. சமகால உண்மையை சொல்வது தான் புதிது.
நீ எப்பொழுது பார்த்தாலும் அரசியல்வாதியையே வில்லனாக காட்டுகிறாய் என்றால், அவன் வில்லனாக இருக்கிறான், சமூகத்தில் உள்ளான். அதை எவ்வளவு உண்மைக்கு நெருக்கமாக சொல்வது. இந்த படத்தில் அரசியல்வாதி வில்லன் இல்லை. அவனை தாண்டி ஒரு பயங்கரமான வில்லன் இருக்கிறான் என்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அவர் ஐடி விங், வார் ரூம் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதாலும், சமகால நிகழ்வு என்பதாலும் யாரை சொல்கிறார் என்று சினிமா ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கிடையே பெங்களூரில் ஜனநாயகன் படத்தின் FDFS டிக்கெட் ரூ. 2,500க்கு விற்பனையானது தமிழகத்தில் பலரையும் அதிர வைத்துவிட்டது.
Source link
