47,59,000
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 47,316 கிராமங்களில் 47,59,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக மத்திய சமூகநீதித்துறை தெரிவித்துள்ளது.
5,175
சுரங்க திட்டங்கள், கனிம உற்பத்திஅதிகரிப்பில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 5,175 கோடி ரூபாய் ஊக்கத்தொகையைபெற வழிகாட்டுதல்களை நிதி அமைச்சகம் இறுதி செய்துள்ளது.
41
நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் 41% பங்களிப்புடன் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.மொத்த ஏற்றுமதியிலும்24% பங்களிக்கிறது
1,00,000
விமான டிக்கெட் முன்பதிவில், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் நடைமுறைகளை
பின்பற்றியதற்காக ஸ்பைஸ்ஜெட்நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
50
கோவா மாநிலத்தில் பைக் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களை வாங்க, 50% வரை மானியம் வழங்கப்படும் என முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
