எதிர்க்கட்சி தலைவர் பேச்சுக்கு முதல்வர் வெளிநடப்பு: திமுக கடும் அட்டாக் – dmk it wing post regarding the cm joseph vijay leaving the assembly

சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, தவெக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து திங்கட்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிப்பதாக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசினார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் . இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் பேசும்போது திங்கட்கிழமை அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். அப்போது யாரும் ஓடி விடக்கூடாது என கூறிவிட்டு அவையை விட்டு கிளம்பினார். இந்நிலையில் இதனை கிண்டல் அடித்து திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link