எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரம்; அவதூறுகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் நிதின் கட்காரி வழக்கு

நமது நிருபர்

எத்தனால் கலந்த எரிபொருள் விவகாரத்தில், தன்னை பற்றி இணையத்தில் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மும்பை ஐகோர்ட்டை நாடியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, போர் பதற்றங்களால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இ20 பெட்ரோல் எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இ20 பெட்ரோல் குறித்தும், அமைச்சர் நிதின் கட்கரி பற்றியும் சமூக வலைதளங்களில் சில அவதூறு பரப்பி வருகின்றனர்.

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் தானும் தனது குடும்பத்தினரும், லாபம் அடைந்து வருவதாக இணையத்தில் அவதூறு மற்றும் டீப்பேக் வீடியோக்களைப் பரப்பியதற்காக, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னதாக மெட்டா, எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க அனுமதி கோரி, நிதின் கட்காரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நிதின் கட்காரி வழக்கறிஞர் சந்தீப் எஸ் லட்டாவின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி அபய் அஹுஜா அவருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Source link