சென்னை: என் மீதான குற்றச்சாட்டை, அரசால் நிரூபிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக, ஏற்கனவே என்னிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பை வழங்கினேன்.
தற்போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தேன். முன் ஜாமின் வழங்க கூடாது என்பதற்காக, அரசு சார்பில் சில கருத்துகள் முன்வைத்தனர். அவை அனைத்தும் கதையாக இருந்தது.
அரசால் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை கண்டிப்பாக நிரூபிக்க முடியாது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
