உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அணுமின் நிலையங்கள் தான் மின்சாரம் வழங்கி வருகிறது. அப்படி மின்சாரம் வழங்கும் உலகின் மிக பிரம்மாண்டமான மின் உற்பத்தி நிலையங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. ‘சோலார் பவர் கைடு’ (Solar Power Guide) அறிக்கையின் அடிப்படையில், அவற்றின் மெகாவாட் உற்பத்தித் திறனின் தரவரிசைப்படி இந்த வெளியாகி உள்ளது.
ரூ.50,000 சம்பளத்தை பார்த்து மயங்காதீங்க… அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கு; இந்திய பெண் சொன்ன அந்த ஒரு விஷயம்
த்ரீ ஜார்ஜஸ் அணை (Three Gorges Dam) – சீனா
இந்த பட்டியலில் சுமார் 22,500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணை முதல் இடத்தில் உள்ளது. இது உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாகும். இது சீனாவின் யாங்சே ஆற்றின் (Yangtze River) குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இட்டைபு அணை (Itaipu Dam) – பிரேசில் / பராகுவே
சுமார் 14,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணை உலக அளவில் மிகப்பெரிய நீர்மின் நிலையங்களில் ஒன்று. இதனை பிரேசில் மற்றும் பராகுவே ஆகிய இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன.
சிலோடு அணை (Xiluodu Dam) – சீனா
சுமார் 13,860 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த பிரம்மாண்ட மின் உற்பத்தி நிலையம் சீனாவின் ஜின்ஷா ஆற்றின் (Jinsha River) குறுக்கே அமைந்துள்ளது.
பெலோ மாண்டே அணை (Belo Monte Dam) – பிரேசில்
சுமார் 11,233 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணை அமேசான் நதிப் படுகையில் அமைந்துள்ளது. இது, பிரேசில் நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
குரி அணை (Guri Dam) – வெனிசுலா
10,235 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணை வெனிசுலா நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குகிறது. இது, உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்.
வுடாங்டே அணை (Wudongde Dam) – சீனா
10,200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சீனாவில் கட்டப்பட்டுள்ள மிக முக்கிய நீர்மின் நிலையங்களில் ஒன்றாகும்.
ஜியுகுவான் விண்ட் பவர் பேஸ் (Jiuquan Wind Power Base) – சீனா
சுமார் 7,965 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த பவர் பேஸ் சீனாவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையமாகத் திகழ்கிறது.
கோரி அணுமின் நிலையம் (Kori Nuclear Power Plant) – தென்கொரியா
சுமார் 7,489 மெகா வாட் திறன் கொண்ட இந்த அணுமின் நிலையம் தென்கொரியாவில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த அணுமின் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
