எப்போதும் ஒரு கண்ணு இருந்துட்டே இருக்கணும்; ஒவ்வொரு அடியும் பாத்து வைக்கணும்; இந்திய மக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

ஈரான் நாடு முழுவதும் குறிப்பாக அதன் தெற்கு கடற்கரை பகுதிகளில் அச்சுறுத்தல்களும் ராணுவ நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருவதால், இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறும் இந்திய அரசு அவசர ஆலோசனை வழங்கியுள்ளது.

ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளிய போக முடியாது… நிறுத்தாமல் அடிக்கும் அமெரிக்கா; மெயின் சுவிட்சில் கை வைத்த ஈரான்

தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், “சமீப நாட்களாக ஈரானில் ஸ்திரமற்ற தன்மையும் மோதல்களும் கணிசமாக அதிகரித்துள்ளன” என்று தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சூழல் மேம்படும் வரை, ஈரான் செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுரை

தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், தங்களுக்குக் கிடைக்கும் வணிக ரீதியிலான விமானங்கள் மூலமாகத் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்பவர்கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும்.

சூழ்நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளச் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மற்றும் பலத்த ராணுவ நடவடிக்கைகள் நடக்கும் இடங்களுக்கு, குறிப்பாக ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளையும் வழிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இந்தியத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

எல்லையைத் தாண்டும் அமெரிக்க – ஈரான் போர்

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்தான் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில், அமெரிக்கா ஈரானுக்குள் இருக்கும் பாலங்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் மற்றும் மின்சார வசதிகள் ஆகியவற்றின் மீது அசுர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மறுபுறம் ஈரானும் மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது  தாக்குதல் நடத்திப் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கு முந்தைய மோதல் காலங்களிலும் இந்தியா இதேபோன்ற அவசர ஆலோசனைகளை வழங்கியுள்ளது, அந்த வரிசையில் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த லேட்டஸ்ட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க

உடனடியாகப் பதிவு செய்ய உத்தரவு

ஈரானில் இருந்துகொண்டு இதுவரை இந்தியத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்யாத இந்தியக் குடிமக்கள் அனைவரும் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களைத் தொடர்ந்து கவனித்து அப்டேட்டுகளைப் பெற வேண்டும் என்றும், உதவி தேவைப்படுபவர்களுக்காக அவசர ஹெல்ப்லைன் எண்களும்  பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link