எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள் வாங்க பயன்படுத்தலாம்- தமிழக அரசு உத்தரவு

Summary

தமிழ்நாடு அரசு, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை அங்கன்வாடி மையங்களுக்கான உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் வாங்க பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆண்டு தோறும் ரூ.3 கோடி (கூடுதலாக ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரூ.3.54 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கலெக்டர் அனுமதி

இந்த நிதி, பொதுமக்களின் உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்யவும், நீடித்து நிலைக்கக்கூடிய பொதுச்சொத்துக்களை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது.

அரசாங்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிதியை கலெக்டர் அனுமதியுடன் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பணிகளுக்குச் செலவழிக்கலாம்.

பள்ளி-கல்லூரிகள்

அதில் குறிப்பாக கல்வி மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு பணிகள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் கட்டுதல்.

அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான மேசைகள், நாற்காலிகள் போன்ற தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல். ஐ.டி.ஐ, கல்லூரிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்தல்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்குக் கட்டிடங்கள் சுற்றுச்சுவர் அமைத்தல்.

அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் மற்றும் குழாய் வசதிகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கலாம்.

அங்கன்வாடி மையம்

இப்போது அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் வாங்கவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

Source link