கொல்கட்டா: மேற்கு வங்க சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்தும், எல்லை பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும், மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
மேற்கு வங்கத்திற்கு, மூன்று நாட்கள் பயணமாக சென்றுள்ள பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நம் அண்டை நாடான வங்கதேசத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் வேலி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து, முதல்வர் சுவேந்து அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சட்டவிரோத ஊடுருவலை தடுப்பது குறித்தும், வங்கதேச எல்லைப் பகுதியில் கூடுதல் படையினரை குவிப்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.
இதைத் தொடர்ந்து, குஜராத்தைச் சேர்ந்த, ‘அமுல்’ நிறுவனத்தின் சார்பில், மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட உள்ள தயிர் தயாரிப்பு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமித் ஷா பங்கேற்றார்.
மொத்தம், 700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலையில் நாளொன்றுக்கு, 30 லட்சம் லிட்டர் பாலில் இருந்து, 10 லட்சம் கிலோ தயிர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
