வில்லன் எஸ்.ஜே. சூர்யா: பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் சர்தார் 2 படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் ஒரு படத்தில் வில்லனாக நடித்தால் அவரை பார்க்கவே தியேட்டருக்கு கூட்டம் வரும். அந்த அளவுக்கு வில்லத்தனம் செய்வதில் வல்லவர் அவர். அதனால் சர்தார் 2 படம் பார்க்கச் செல்பவர்கள் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பார்த்து அது நடிப்பு என்பதை மறந்து சபிக்கும், திட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில் சென்னையில் நடந்த சர்தார் 2 இசை வெளியீட்டு விழாவில்கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி.எஸ்.ஜே. சூர்யா பற்றி தெரிவித்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு புதிதாக உள்ளது. சுந்தர் சி. கூறியதாவது, நான் சொல்லப் போவது எஸ்.ஜே. சூர்யாவுக்கு நினைவிருக்கா என எனக்கு தெரியவில்லை. நான் அஜித் குமார் சாரை வைத்து படம் எடுத்தபோது நடந்தது.
இரவு நேரத்தில் ஷூட்டிங் நடக்கும். அப்பொழுது ஒல்லியாக ஒருத்தர் வந்து அஜித் சாரிடம் பேசுவார். அவர் வந்ததும் அஜித் சார் போவார். பேசிக் கொண்டிருக்கும்போதே ஏதாவது பிரச்சனையாகிவிடும். செல்லமா கன்னாபின்னா என அந்த நபரை அஜித் சார் திட்டுவார். அப்புறம் என் அருகில் வந்து அமர்ந்து சாதாரணமாக பேசுவார். இது தினமும் நடந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் என்னால் சும்மா இருக்க முடியாமல் அஜித் சாரிடமே கேட்டுவிட்டேன். யாருஜி இவர், தினமும் வருகிறார், பிரச்சனை வருது, நீங்கள் சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டேன்.
அஜித் பட இயக்குநர்: இவர் தான் சார் நான் இப்போ நடிக்கும் படத்தின் இயக்குநர் என்றார் அஜித் சார். என்னஜி என் முன்பே ஒரு இயக்குநரிடம் இப்படி பேசுகிறீர்களே. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றேன். அதை கேட்ட அஜித் சாரோ, சும்மா இருங்க நாளை இந்த படம் ரிலீஸான பிறகு இவர் எவ்வளவு உயரத்திற்கு போகப் போகிறார், என்ன ஆட்டம் ஆடப் போகிறார் என பாருங்கள் என்றார். சில நாட்கள் கழித்து விருது விழாவுக்கு சென்றபோது அங்கு எஸ்.ஜே. சூர்யா தனியாக ஆடிக் கொண்டிருந்தார். அந்த ஆட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எஸ்.ஜே. சூர்யா உடன் நடிக்க ஹீரோக்களுக்கு அசுரத்தனமான தைரியம் வேண்டும். ஏனென்றால் அவர் நடிப்பு ராட்சசன். மார்க் ஆண்டனி படத்தில் ஒரு ஷாட்டை என்னிடம் காட்டினார் விஷால். ஜாக்கிரதையா இரு விஷால், கொஞ்சம் அசந்தா கடிச்சு முழுங்கி துப்பிடுவார் என்று அவரை எச்சரித்தேன் என்றார்.
சுந்தர் சி. கணிப்பு: சுந்தர் சி. சொல்வது சரி தான். ஹீரோக்களை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு நடிக்கும் ஆள் தான் எஸ்.ஜே. சூர்யா. இந்நிலையில் மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் இங்கு எத்தனை வருங்கால எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் இருக்கிறார்களோ என்றேன். அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நினைக்கவில்லை என்றார் சுந்தர் சி.அது தான் விஜய் ரசிகர்களை அவரை கொண்டாட வைத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிடட் விஜய்ணா பற்றி கணித்துச் சொல்லும் முன்பே சுந்தர் சி. சார் கணித்திருக்கிறார்.அவருக்கு தான் விஜய்ணா மீது எவ்வளவு பாசம் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். மெர்சல் விழாவுக்கு அடுத்து சுந்தர் சி. கலந்து கொண்ட இசை வெளியீட்டு விழா சர்தார் 2 விழா ஆகும். அவர் மிகவும் சுவராஸ்யமாக பேசுகிறார். அதனால் இனி அடுத்தடுத்த விழாக்களில் சுந்தர் சி.யை பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
Source link
