தவறுதலாக ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார்.
ஏ.சி., வாஷிங்மெஷின் இல்லை
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம். அதே பகுதியில் மளிகை கடை வைத்து உள்ளார். 2 அறைகள் கொண்ட இவரது வீட்டில் ஏ.சி., வாஷிங்மெஷின் எந்திரங்கள் இல்லை. வழக்கமாக ரூ.800 முதல் ரூ.850 வரை மின்கட்டணம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் இந்த மாதம் அவருக்கு ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மின்கட்டணம் உயர்வு குறித்து விளக்கம் கேட்பதற்காக அவர் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோதும் அங்கிருந்த ஊழியர்கள் முறையான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.
ரூ.14,234 மின் கட்டணம்
எனவே தவறுதலாக ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, ஒவ்வொரு முறையும் ரூ.800 வரைக்கும் தான் மின் கட்டணம் வரும். எங்கள் வீட்டில் ஏ.சி, வாஷிங்மெஷின் போன்ற அதிக மின் பயன்பாடு உள்ள பொருட்கள் கிடையாது. எனவே குறைவான மின் கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது திடீரென 14 ஆயிரத்து 234 ரூபாய் மின் கட்டணம் செலுத்தும் படி செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இது எப்படி என்று தெரியவில்லை. மின் கட்டணம் ரீடிங் எடுக்க வருபவர்கள் 60 நாள் கழித்தும் 70 வது நாள் தான் வருகிறார்கள். அதுவும் அட்டையில் எழுதுவது கிடையாது. இதே போல் பலருக்கு மின் கட்டணம் உயர்ந்து வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
