ஏதாவது பெரிய மாற்றத்திற்கான ஒத்திகையா? தி.மலை விவகாரத்தில் ஹிந்து அமைப்பினர் சந்தேகம்

சென்னை: ‘திருவண்ணாமலை கோவிலில், செய்தியாளர்களுக்கு தடை விதித்த ஹிந்து சமய அறநிலையத் துறை, முஸ்லிம் நபருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் இப்படி விதிமீறல் நடப்பது, ஏதாவது பெரிய மாற்றத்திற்கான ஒத்திகையா’ என்று, ஹிந்து அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

* ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் :

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அமைச்சர்கள் ரமேஷ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கோவிலில் ஆய்வு செய்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில், முஸ்லிம் நபர் ஒருவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்; இது ஏற்கத்தக்கதல்ல. இத்தகைய செயல்பாடுகள், பக்தர்களின் நம்பிக்கையையும், நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.

எனவே, செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தையும், முஸ்லிம் நபர் எந்த அடிப்படையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

* ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ்:

திருவண்ணாமலை கோவிலில் ஆய்வுக்கு வந்த அமைச்சர்களுடன் முஸ்லிம் நபர் ஒருவர், மத அடையாளங்களுடன் வந்துள்ளார். முதலில் மதுரை, தற்போது திருவண்ணாமலையில் இதுபோல் நடப்பது, ஏதாவது பெரிய மாற்றத்திற்காக இந்த அரசு ஒத்திக்கை பார்க்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுவே கேரளாவில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், கடந்த 2023ல் ஓர் முஸ்லிம் பெண் வந்தபோது பூஜைகள் நிறுத்தப்பட்டன; பிராயச்சித்த பூஜைகள் செய்யப்பட்டன. கேரளாவில் கோவில் ஆச்சாரம் முக்கியமாக கருதப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் அறநிலையத் துறையை பொறுத்தவரை, அண்ணாமலையார் கோவில், பணம் கொட்டும் இடம் மட்டுமே. கோவில் சாநித்யமோ, மரபோ ஒரு பொருட்டே இல்லை என, ‘அறமற்ற துறை’யாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Source link