அந்த வகையில், விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை மாற்றி புதிய நிர்வாகியை மாவட்டச் செயலாளராக நியமித்தார். இதனால் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் அதீத கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (29-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுகவில் கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். எனக்கும் இபிஎஸ்ஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். நான் இபிஎஸ்ஸை விமர்சனம் செய்கிறேன், அவர் நடவடிக்கை எடுக்கிறார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் இந்த இயக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிற பெண்களை தரக்குறைவாக மானபங்கப்படுத்தி அவமானப்படுத்தி கேவலப்படுத்தி இப்படிப்பட்ட செய்திகளை பரப்புகிறார்கள். அந்த நபர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிற தலைமை நியாயமா இபிஎஸ் அவர்களே? இதற்கு உங்களுக்கு அழகாக இருக்கிறதா?
ஏன் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? என் வீட்டில் பெண்கள் இல்லையா? எல்லோர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். இது உங்கள் தலைமைக்கு அழகா? இதுதான் நீங்கள் கட்சி நடத்துகிற லட்சணமா? ஜெயலலிதா இருந்திருந்தால் உங்களுடைய நிலைமை என்ன ஆயிருக்கும். ஜெயலலிதா இருந்திருந்தால் பெண்களை தொட முடியுமா? அவர்களைப் பற்றி பேச முடியுமா? அந்த அவதூறு செய்திகளை உடனுக்குடன் எனக்கு அனுப்புங்கள் என்று இபிஎஸ் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். இதை அதிமுக தொண்டர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம், மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, அதுதான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது” என்று ஆவேசமாகப் பேசினார்.
