ஐபோனை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்; பார்சலில் இருந்த பொருளைக் கண்டு ஏமாற்றம்

மராட்டிய மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஒருவர், கடந்த 22-04-2023 அன்று ஐபோன் 14 ப்ரோவை பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்திருந்தார். ரூ.1,11,793 ரூபாய் விலை மதிப்புள்ள போனை ஆர்டர் செய்திருந்த அவருக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அந்த பார்சலை திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாகத் தாடி வளர்க்கும் எண்ணெய் தான் இருந்தது. இதனால், அவர் ஏமாற்றமடைந்தார்.    

இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தில் அவர் புகார் அளித்தார். இருப்பினும்,  இதற்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், இது சம்பந்தமாக மும்பை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், இந்த பிழைக்குத் தவறான பொருளை அனுப்பிய பிளிப்கார்ட் மற்றும் விற்பனையாளரின் தவறு தான் என்பதை உறுதி செய்தது.   

இதையடுத்து, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஐபோனின் அசல் தொகையான ரூ.1,11,793 ஐ போன் ஆர்டர் செய்த தேதியில் இருந்து 9 சதவீத வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். அதே போல, வாடிக்கையாளர் மன உளைச்சல் அடைந்துள்ளதால், அவருக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது . இதில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு கிட்டதட்ட ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.  

Source link