ஐப்பசி மாத பெளர்ணமி அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அன்னாபிஷேகம் தவிர இந்த நாளுக்கு என்ன சிறப்பு? இந்த நாளில் வேறு என்ன வழிபாடுகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விளக்குகிறார் சாஸ்திர சம்பிரதாப ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள்.
ஐப்பசி பெளர்ணமி வழிபாட்டு சிறப்புகள் :
இந்த ஆண்டு ஐப்பசி பெளர்ணமி அக்டோபர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ரேவதி நட்சத்திரமும், பெளர்ணமியும் இணையும் நாள் என்பதால் இது சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாகும். 27 நட்சத்திரங்கள் கடைசியாக 27வது நட்சத்தரிமாக வருவது ரேவதி. இது மோட்சத்தை குறிக்கக் கூடிய நட்சத்திரம் ஆகும். ஐப்பசி பெளர்ணமி அன்று விரதம் அன்று விரதம் இருந்து சந்திரனை வழிபடுவதால் மனஅமைதி, ஆரோக்கியம், செல்வம் தரும். சந்திரனுக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து, பால் அல்லது வெள்ளை நிற நைவேத்தியம் சமர்ப்பிக்கலாம். பொதுவாகவே பெளர்ணமி நாளில் சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வழிபடுவதும், அபிஷேகங்களுக்கு பொருட்கள் வாங்கி தருவதும் பாவ நிவாரணம் தரும்.
யார், என்ன வழிபாடு செய்யலாம்?
ரேவதி நட்சத்திரத்தில் இந்த ஆண்டு ஐப்பசி பெளர்ணமி வருவதால் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு அல்லது உங்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபடலாம். இதனால் ஜென்ம சனி நன்மைகளை வழங்கும். பாவங்களில் இருந்து விடுபடலாம். ஐப்பசி பெளர்ணமியில் விரதம் இருந்து, இரவு நேரத்தில் சந்திர தரிசனம் செய்து வழிபடுவதால், சந்திரதோஷம் யாருக்காவது இருந்தால், அவர்கள் இதிலிருந்து விடுபட முடியும். பெளர்ணமி அன்று சந்திரனை பார்த்து, “சந்திர பகவானே, மனஅமைதியை தர வேண்டும்” என்று பிரார்த்தனை செய்வது நல்ல பலன் தரும்.
பெளர்ணமி நாளில் என்ன செய்யலாம்?
– பசுவிற்கு உணவு கொடுக்கலாம்.
– உணவு தானம் அல்லது அன்னதானம் வழங்கலாம்.
– ஆடை தானம் செய்யலாம். இது புண்ணியங்களை அதிகரிக்கும்.
– காலை, மாலை இரண்டு வேளையும் சந்திர தரிசனம் செய்து, வழிபடுவது நல்லது.
– சிவாலயத்தில் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
– வெண்ணிற ஆடை அணிந்து வழிபாடு செய்யலாம்.
– தானம் செய்வது மிகச் சிறந்த பலனை தரும்.
– ஐப்பசி பெளர்ணமி நாளில் சிவ மந்திரங்களை உச்சரிப்பதும், தியானம் செய்வதும் நல்லது.
ஜோதிட ரீதியாக பார்த்தால், சந்திரன் மேஷ ராசியில் இருப்பதால் ஆற்றல், உற்சாகம், புதிய தொடக்கங்களுக்கு நல்லது. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ஆன்மீக வளர்ச்சி, யாத்திரை செல்லக் கூடிய யோகம் ஏற்படும். தியானம் செய்தால் கஷ்டங்கள் விலகும். கலைகள் சார்ந்த முயற்சிகளுக்கு சிறப்பானது. தொழில் செய்பவர்கள் இந்த நாளில் புதிய திட்டங்களை துவங்குவது நல்லது. குடும்ப ஒற்றுமை சீராகும். உறவுகள் பலப்படும்.
– கட்டுரையை வழங்கியவர்
டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்,
சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர்.
மொபைல் எண்: 9087426655
