ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி

கொச்சி,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளா அணி சார்பில் நிஹல் சுதீஸ் ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலும், விபின் மோகனன் 36-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து கோவாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி. கோவா – மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

Source link