திமுக தமிழகத்திற்கும், திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திற்கும் துரோகம் செய்துள்ளன- பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8.30 மணிக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* மகளிர் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம்.

* மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் கடடுக்கதைகளை பரப்பினர்.

* பெண்களின் பக்கம் நிற்பதற்கான வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டது.

* மாநில கட்சிகளின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடை போடுகிறது.

* பெண்கள் மசோதா முறியடிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டது.

* தொகுதி மறுவரையறை மகளிருக்கு அதிக இடங்களை கொடுக்கும்.

* பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தங்களுக்கு ஆபத்து என எதிர்க்கட்சிகள் அச்சம்.

* மசோதாவை தடுத்து நிறுத்தியவர்களை பெண்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

* 40 ஆண்டு கால போராட்டத்தை ஒரு நொடியில் உடைத்து விட்டார்கள்.

* தொகுதி மறுவரையறை அனைத்து மாநிலங்களுக்கும் பயனாக இருக்கும்.

* மசோதா நிறைவேறி இருந்தால் தமிழகத்தின் தொகுதி எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

* அரசியல் ஆதாயத்திற்காக சொந்த மாநிலத்திற்கே துரோகம் இழைத்துவிட்டார்கள்.

* திமுக ஆதரித்திருந்தால் தமிழகத்தின் குரல்கள் மேலும் வலிமை பெற்றிருக்கும்.

* சீர்திருத்தத்திற்கு எதிரான கட்சி காங்கிரஸ்

* திமுக தமிழகத்திற்கும், திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திற்கும் துரோகம் செய்துள்ளன.

Source link