ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு பிறந்தநாள்; முதல்வர் விஜய் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று (22-10-26) ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசில் அமைச்சராகப் பொறுப்பு வகித்துவருகிறார். அதற்கு முன்பாக குஜராத் மாநில அமைச்சரவையிலும் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.