ஒரு அழைப்பிதழ் ரூ. 25 ஆயிரம்.. துரைமுருகன் குடும்பத்துடன் சம்பந்தம் வைத்த கண்ணன் ரவி – திமுகவுடன் இப்படியொரு டீலிங் பின்னணி? – durai murugan granddaughter marriage deepak ravi wedding and kannan ravi dmk leaders political connections

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட திருமண பத்திரிக்கை ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இது திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் பேத்தியும் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் இல்ல திருமண விழா அழைப்பிதழ் என்று தெரியவந்த உள்ளது. மேலும் யார் இந்த கண்ணன் ரவி அவருக்கும் திமுகவினருக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கண்ணன் ரவி – துரைமுருகன் குடும்பத் திருமணம்

திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் இவர் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இவரின் மகள் செந்தாமரைக்கும் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் வரும் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சமீபத்தில் நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்ட முறையில் நடந்தது. அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இதனைத் தொடர்ந்து கண்ணன் ரவி மற்றும் அவரது மகன் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் தொழில் அதிபர்கள் என அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திருமண அழைப்பிதழில், மயில் தோகை விரிப்பது போன்ற வடிவமைப்பு மற்றும் தங்க விநாயகர் சிலை விலை உயர்ந்த இனிப்பு ரகங்கள் என பிரம்மாண்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புதல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஒரு திருமண அழைப்பிதழ் விலை பரிசு பொருள்கள் அனைத்தும் சேர்த்து தோராயமாக 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

யார் இந்த கண்ணன் ரவி?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் கண்ணன் ரவி. ‘கண்ணன் ரவி குரூப்’ (Kannan Ravi Group) என்ற நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான ‘இராவண கோட்டம்’ படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பரவலாக அறியப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தையும் தயாரித்தார். தொடர்ந்து, 2026-ல் வெளியான ‘TN 2026’ மற்றும் ‘Bang Bang’ ஆகிய படங்களையும் இவர்தான் தயாரித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தையும் தனது ‘KRG பிராடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்து வருகிறார். இந்த புதிய படத்தில் இவருடைய மகன் தீபக் ரவியும் இணை தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக மூத்த தலைவர் குடும்பத்துடன் உறவாகும் தயாரிப்பாளர்!

தற்பொழுது திரைத்துறையும் தாண்டி தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கும் திமுக வட்டாரத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் முதலீடுகள் மற்றும் நிதி மேலாண்மைகளைக் கவனிப்பதில் தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பல்வேறு தரப்பிலும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தங்களது முதலீடுகளை வெளிநாட்டில் செய்துள்ளதாக நீண்டகாலாம அரசியல் வட்டாரத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் எதிர்க்கட்சித்தலைவர் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அடிக்கடி மேற்கொள்ளும் துபாய் பயணங்கள் குறித்த கேள்விகளும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகின்றன. லண்டன் மற்றும் துபாயில் சபரீசன் மேற்கொண்டுள்ள முதலீடுகளை ஒருங்கிணைப்பதிலும், கவனிப்பதிலும் கண்ணன் ரவி செயல்பட்டு வருவதாகவும், அதற்காகவே இந்த அரசியல் தொடர்புகள் வலுப்பட்டு வருவதாகவும் எதிர்கட்சியினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு திருமண அழைப்பிதழ் விலை 25000 ரூபாயா?

இத்தகைய சூழலில், கண்ணன் ரவி- துரைமுருகன் வீட்டில் சம்மந்தம் வைத்துள்ளார். திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு வழக்குகள் விசாரணையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதி எம்பி கதிர் ஆனந்திற்குத் தொடர்புடைய இடங்களில் இருந்து ₹11.48 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது ஏற்கனவே திமுக.,விற்கு சொந்தமான மொத்த பணத்தையும் சபரீசன் தான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் திமுக ஆட்சி காலத்தில் முறைகேடு, ஊழல் செய்து சம்பாதித்த பணம் தான் துபாய் மற்றும் லண்டனில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை தற்போதுள்ள தவெக அரசோ அல்லது அமலாக்கத்துறை இந்த விவகாரங்களை கையில் எடுத்து விசாரிக்க துவங்கினால் அது திமுக.,வை சேர்ந்த பல முக்கிய முக்கிய புள்ளிகளுக்கு மிகப் பெரிய நெருக்கடியாக அமையும். பலர் சிறை செல்லவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த சமயத்தில் சபரீசனின் முதலீடுகளை நிர்வகித்து வரும் கண்ணன் ரவி தனது மகனின் திருமணத்திற்காக ஒரு பத்திரிக்கைக்கு ரூ.25,000 வரை செல்விட்டுள்ள விவகாரம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திமுகவினர் வெளிநாட்டு பயணத்தின் பின்னணி இதுதானா?

தற்பொழுது திரைத்துறையும் தாண்டி தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கும் திமுக வட்டாரத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் முதலீடுகள் மற்றும் நிதி மேலாண்மைகளைக் கவனிப்பதில் தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பல்வேறு தரப்பிலும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தங்களது முதலீடுகளை வெளிநாட்டில் செய்துள்ளதாக நீண்டகாலாம அரசியல் வட்டாரத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் எதிர்க்கட்சித்தலைவர் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அடிக்கடி மேற்கொள்ளும் துபாய் பயணங்கள் குறித்த கேள்விகளும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகின்றன. லண்டன் மற்றும் துபாயில் சபரீசன் மேற்கொண்டுள்ள முதலீடுகளை ஒருங்கிணைப்பதிலும், கவனிப்பதிலும் கண்ணன் ரவி செயல்பட்டு வருவதாகவும், அதற்காகவே இந்த அரசியல் தொடர்புகள் வலுப்பட்டு வருவதாகவும் எதிர்கட்சியினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சட்ட சிக்கலில் திமுக..

தற்போது இந்த பத்திரிகையின் விலை 25 ரூபாய் என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றன.. மேலும் இதனை என்ன என்று கொஞ்சம் விசாரிங்கள் என்று இந்திய வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறையை டேக் செய்து சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை இதனை கவனித்து, எவ்வளவு பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு பத்திரிக்கைக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருப்பதும், இந்தியா முழுவதும் பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருவதும், எத்தனை பேருக்கு இவர் பத்திரிகை அடித்திருப்பார் ? இதனால் எவ்வளவு தொகை செலவு செய்திருப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது மேலும் ஒரு பத்திரிக்கைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார் என்றால் ஒட்டுமொத்த கல்யாணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்துள்ளார்கள் இந்த பணம் எப்படி வந்தது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு வருமான வரி துறையும் அல்லது அமலாக்க துறையும் விசாரணையை துவங்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி விசாரணை தூங்கினால் அது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது
Source link