கொடைக்கானலில் மல்டி லெவல் கார் பார்க்கிங்- தமிழக அரசு திட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து ஆலோசனை வழங்க ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கொடைக்கானலில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 7.59 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் – வணிக வளாகம் + பல அடுக்கு கார் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கரில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக வளாகம் மற்றும் அதற்கு தேவையான பார்க்கிங் வசதி (1.90 + 2.62 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆலோசகரின் பணிகள்

நிலம், கட்டிடங்கள், உள்கட்டமைப்பு குறித்த தகவல் சேகரிப்பு.

அருகில் உள்ள அரசு நிலங்களின் விவரங்கள் சேகரித்தால் போதும்.

3 கி.மீ சுற்றளவில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

பார்க்கிங் செய்வதற்கு எந்த அளவுக்கு தேவை உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link