ஜனநாயகன் பட டிக்கெட் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இருந்தாலும் விஜய்க்காக அதை பெரிதுபடுத்தாமல் டிக்கெட் வாங்குகிறார்கள்.
ஜனநாயகன் டிக்கெட் ரூ. 2, 500க்கு விற்கப்படுகிறதாம் என்பது தான் சினிமா ரசிகர்களை வியந்து பேச வைத்திருக்கிறது.
விஜய் படம்
ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு பெயர் போன விஜய் தற்போது அரசியலில் மட்டும் கவனம் செலுத்துகிறார். அரசியலுக்காக சினிமா கெரியரை முடித்துக் கொண்டார். உச்சத்தில் இருந்தபோது நடிப்புக்கு முழுக்கு போட்ட தளபதி விஜய் கடைசியாக நடித்த படம் தான் ஜனநாயகன்.அந்த படம் ஜூலை 23ம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்பனை செய்யவே கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். ஆனால் பெங்களூரில் அப்படி இல்லை.
பெங்களூரில் அதிர்ச்சி
பெங்களூர் ரசிகர்கள் புலம்பல்
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் recliner டிக்கெட் வாங்கினால் ரூ. 10 ஆயிரம் காலி. ஒரு படம் பார்க்க இவ்வளவு பெரிய தொகையா என்று சினிமா ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகியிருக்கிறார்கள். தமிழகத்தில் டிக்கெட் விலை உயர்த்தப்படாததால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இங்கு தான் பர்ஸை ஓட்டை போடும் அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது ஜனநாயகன் டிக்கெட் என்று மக்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது.
நண்பன் ஸ்ரீநாத்
ரஜினி படங்கள்
விஜய் வதந்தி
ஜனநாயகனுக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களில் குட்டீஸ்கள் அதிகம். அப்படி இருக்கும்போது சிறுவர், சிறுமியர் யாரும் தியேட்டருக்கு செல்ல முடியாதபடி ஏ சான்று வந்துவிட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களால் மட்டுமே தியேட்டரில் ஜனநாயகனை பார்க்க முடியும். அதையும் மீறி யாராவது குழந்தைகளை அழைத்து வந்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். மேலும் விஜய்ணாவுக்கு தான் அது கெட்டப் பெயராகும் என்று பேசப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க நேரில் சென்றார் விஜய் என்று ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டது இல்லை என்று டெல்லி போலீசார் விளக்கம் அளித்துவிட்டார்கள்.
