ஒவ்வொரு வருடமும் ஐபோன்களுக்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும், கறுப்பு சந்தை மற்றும் மறுவிற்பனை போன்ற காரணங்களால் ஐபோன் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே, வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை, இந்தியாவில் ஒரு நபர் அதிகபட்சம் 2 போன்களை மட்டுமே வாங்க முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. உற்பத்தி பற்றாக்குறையைச் சமாளிக்கவும், கறுப்புச் சந்தை விற்பனை மற்றும் அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் புதியதாக வரவுள்ள ஐபோன் டியோ, ஐபோன் 17, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்த கட்டுப்பாடு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
