ஒரு பக்கம் ஈரான்; இன்னொரு பக்கம் ரஷ்யா: உக்ரைன் துறைமுகத்தில் பொழிந்த ஏவுகணை மழை… 4 இந்திய மாலுமிகள் பலி

உக்ரைனின் ஒடேசா (Odesa) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘எம்.வி கோல்டன் லியோ’ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியக் குடிமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப் போராடி வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்  அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின் போது, இந்தக் கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கல்வியில் கிங்: 60% பேர்கிட்ட டிகிரி இருக்கு… முதல் இடத்தில் கனடா; லிஸ்டில் இல்லனாலும் இந்தியா தான் டாப்

வெளிவுறத்துறை அமைச்சகம் இரங்கல்

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, எதிர்பாராதவிதமாக 4 இந்தியக் குடிமக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர்; மேலும் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் இந்தச் சூழ்நிலையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வணிகக் கப்பல்கள் மீது தாக்குதலா? இந்தியா கடும் கண்டனம்

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு புதுடெல்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வணிகக் கப்பல்களையும், அப்பாவி மாலுமிகளையும் இலக்கு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

“இந்தியா இதுபோன்ற தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறது. வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது, அப்பாவி மாலுமிகளின் உயிரைப் பணயம் வைப்பது மற்றும் கடல்வழி வர்த்தக சுதந்திரத்தைத் தடுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று; இவை தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

ரஷியாவின் 3 குரூஸ் ஏவுகணைகள் – உக்ரைன் குற்றச்சாட்டு

கினியா-பிசாவ் (Guinea-Bissau) நாட்டின் கொடியுடன் பயணித்த ‘கோல்டன் லியோ’ கப்பலில் இந்தியா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் இருந்தனர். இந்தச் சூழலில், ரஷியாவின் 3 ‘குரூஸ் ஏவுகணைகள்’ (Cruise missiles) இந்தக் கப்பலைத் தாக்கியதில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதாக உக்ரைன் கடற்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஒடேசா துறைமுகப் பகுதியில் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், 17 மாலுமிகளில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் துறைமுக அதிகார அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷியாவின் பதில் – ஒடேசாவில் பெரும் சேதம்

ரஷியா நடத்திய தாக்குதல்களில் ஒடேசா பிராந்தியத்தில் இதுவரை குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒடேசா ஆளுநர் தெரிவித்துள்ளார். ஈரான், அமெரிக்கா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Source link