`ஒரு பைத்தியக்காரன் போல் வேலை செய்து உறவுகளை இழந்துவிட்டேன்!' – கண்ணீர் சிந்திய ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இதில் ஆமிர் கானுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விழாவில் சிங்கப்பூர் காமெடியன் ரிஷி புத்ரானியுடன் கலந்துரையாடலில் ஆமீர் கான் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் உங்களது சினிமா வாழ்க்கையில் பலவீனமான தருணம் எது என்று கேட்டபோது,”நான் கொரோனா காலத்தில் வீட்டில் உட்கார்ந்து, நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, ​​​​என் வாழ்க்கை சுமார் 30 ஆண்டுகளை கடந்துவிட்டன. ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளாக நீங்கள் செய்வதை முழுவதுமாக ஒரு பைத்தியக்காரனைப் போல வேலை செய்வது பரவாயில்லை.

ஆனால் இது 30 வருடங்கள் தொடர்ந்தால், நீங்கள் உங்கள் உறவுகளை இழந்துவிட்டீர்கள். உங்கள் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் இப்போது பெரியவர்கள். அதனால் நான் ஒரு பெரும் இழப்பை உணர்ந்தேன்”என்று தெரிவித்தார்.

முன்னாள், இன்னாள் மனைவியுடன் ஆமீர் கான்

அப்படி பேசியபோது அவர் கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்தது. இதையடுத்து ஆமீர் கான் பேசுவதை நிறுத்தி கண்ணீர் சிந்தினார். உடனே நடிகர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்ட ஆமீர் கான், இந்த அனுபவம் தன்னிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டியது. கடந்த நான்கு ஆண்டுகளாக எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமென்றே நேரத்தை செலவிடுகிறேன்.

இந்த எண்ணம் எனக்கு 56 வயதில் தோன்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நான் 86 வயதில் இல்லை. இதைப் பற்றி 85 வயதில் நினைக்க தோற்றி இருந்தால் அது மிகவும் தாமதமாகி இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அவர் தனது பலவீனமான தருணங்களைப் பற்றி கூறுகையில், தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து வீழ்ச்சி வரை விவரித்தார். அவரது 1988 ஆம் ஆண்டு அறிமுகமான கயாமத் சே கயாமத் தக் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, ஆறு மாதங்களுக்குள் ஒன்பது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ததை ஆமீர்கான் நினைவு கூர்ந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியவுடன் தான் செய்த தவறை உணர்ந்ததாக தெரிவித்தார்.

“வீட்டிற்கு வந்து தனது மனைவி ரீனாவிடம் அழுது புலம்பியதாக ஆமீர்கான் கூறினார். படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியடைந்தன. இதனால் தன்னை ஒற்றை பட அதிசயம் என்று முத்திரை குத்தினர். அந்த நேரத்தில், மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும், நான் புதைமணலில் இருப்பதைப் போல உணர்ந்தேன். நான் மெதுவாக மூழ்கிக்கொண்டிருந்தேன். மேலும் ஆழமாக மூழ்கி இருந்ததால் நான் வெளியே வருவதற்கு எவ்வளவோ சிரமப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

Source link