ஒரே ஆணை திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்; இது தான் காரணமா?

உத்திர பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதிக்குட்பட்ட தௌரியா கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த சகோதரிகள் மூன்று பேர் ஒரே நேரத்தில், ஒரே ஆணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18) ஆகிய மூன்று சகோதரிகளும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்துவருகின்ற்னர். இவர்களை லட்சக்கணக்கானோர் பிந்தொடர்கின்ற்னர். இவர்கள் ஒன்றாக வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பேரும் ஒரே ஆணை திருமணம் செய்துகொள்வது போல் வீடியோ வெளியிட்டிருந்தனர். அதாவது, கடந்த 17 தேதி அந்த கிராமத்தில் உள்ள சாமுண்டா தேவி கோயிலில் இந்த சகோதரிகள் ஒரு இளைஞரைத் திருமணம் செய்து கொண்டனர். 

திருமண வீடியோவை இந்த சகோதரிகள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில். அதற்கு அவர்கள் வீடியோ ஒன்றில் விளக்கமளித்தனர். அதாவது, ”நாங்கள் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு நாங்கள் பிரிய வேண்டி வரும். எங்களால் பிரிந்து வாழ முடியாது.  நாங்கள் எப்போது ஒன்றாகவே இருக்க விரும்புகிறோம். அதே நேரத்தில், திருமணத்திற்குப் பிறகு எங்களால் ரீல்ஸ் வீடியோவும் எடுக்க முடியாது. அதனால் தான் நாங்கள் இந்த திருமணத்தைச் செய்து கொண்டோம்” என்று தெரிவித்திருந்தனர். 

இந்த மூன்று சகோதரிகளையும் திருமணம் செய்து கொண்ட  விகாஸ் என்ற இளைஞர் ஷியாம்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இந்த சகோதரிகளின் ரீல்ஸ் வீடியோவிற்கு படப்பிடிப்பாளராக (கேமரா மேன்) வேலை பார்த்தவர். சில ரீல்ஸ் வீடியோக்களில் இந்த சகோதரிகளுக்கு இவர் கணவராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Source link