ஒரே நேரத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எதிரெதிரே போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து இளைஞர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதி வழியில் நடந்து வந்த போராட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக காவல்துறையினர் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். குறிப்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் சில காவலர்கள் தகாத முறையில் நடந்துகொள்வது மற்றும் கடுமையாகத் தாக்குவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இளைஞர்களுக்கு ஆதரவாக இந்தியா  கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கல்வி துரையில் நிலவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். 

அதே நேரத்தில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜியைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். 

ஆளும் கசி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, திமுக வினர் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.  

Source link