ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த இளைஞர்; இளம் பெண் கொடுத்த நூதன தண்டனை

மகாராஷ்டிரா மாநிலம், பதினோரு-அகோலா  இடையே சென்று கொண்டிருந்த விரைவு ரயில் வண்டியில் இளைஞர் ஒருவர், பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அந்த நபரைக் கண்டித்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரை அங்கிருந்த சக பயணிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.   

மேலும், இந்த நபரின் செயலால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண், அந்த இளைஞருக்கு நூதன முறையில் தண்டனை கொடுத்தார். அதாவது, சக பயணிகள் முன்பாகவே தான் பையில் வைத்திருந்த ஒப்பனை (மேக்-அப்) பொருட்களை எடுத்து அந்த இளைஞருக்குப் ஒப்பனை செய்தார். அந்த பெண், அவருக்கு லிப்ஸ் டிக் போட்டு விட்டு, அவரது கையில் வளையல்களை அணிவித்தார். அப்போது அந்த இளைஞரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.  இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.  

இளைஞருக்கு அந்த இளம் பெண் கொடுத்த நூதன தண்டனையை அங்கிருந்த அனைவரும் பாராட்டினார். இந்நிலையில், இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து பலரும் பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர். பொது இடங்களில் மற்றும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு இவ்வாறு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும். அந்த பெண் சரியாகச் செய்துள்ளார் எனப் பலரும் பாராட்டியுள்ளனர். மேலும், சிலர் பொது மக்கள் இவ்வாறு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் விமர்சித்து வருகின்றனர்.  

Source link