ஓட்டல் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல்: ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய வீரர்

டோக்கியோ:

ஜப்பானின் அய்ச்சி- நகோயாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் பல போட்டிகளில் வீரர்கள் பதக்கங்களை பெற்று சாதனை படைக்கின்றனர்.

பீஹாரை சேர்ந்த முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினார். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பெண் ஒருவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு, முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஓட்டல் நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் புகார் அளித்தார். ஷம்ஸ் ஆலம் ஷேக்கை போலீசார் கைது செய்து நாள் முழுவதும் விசாரணை நடத்தினர். போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்காமல் அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினர்.

சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்திய முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்க இந்திய பாராலிம்பிக் குழு பரிசீலனை செய்கிறது. ஆசிய விளையாட்டு போட்டி முடிந்ததும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Source link