ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வது எப்படி?
https://sarathi.parivahan.gov.in/ இணையதளத்திற்கு சென்று முதலில் ‘டிஎல் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கவும்’ என்ற பிரிவை கிளிக் செய்தால், புதுப்பித்தலுக்கு தேவையான விவரங்கள் இருக்கும், அதன் இறுதியில் ‘தொடரவும்’ பட்டனை கிளிக் செய்தால், ஓட்டுநர் உரிமம் எண், பிறந்த தேதி, கேப்சா ஆகியவற்றை உள்ளிட்டு Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும். மாநிலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அஞ்சல் குறியீடு போன்றவற்றை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி படிவத்தை பிரிண்ட் செய்துக் கொள்ளவும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் நாளில் பழைய உரிமம், 40 வயதிற்கு மேல் இருந்தால் Form 1A, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும். மேலும் தகவலுக்கு அரசாங்கத்தின் https://sarathi.parivahan.gov.in/ தளத்தினை பார்வையிடவும்.
