இந்த த்ரிஷா ஏன் லண்டனுக்கு சென்றார் என்று தான் கடந்த இரண்டு நாட்களாக பேச்சாக இருந்தது. இந்நிலையில் அவரின் லண்டன் பயணத்திற்கான காரணம் தெரிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
த்ரிஷா கிருஷ்ணன் லண்டனுக்கு சென்றது ஏன் என்பது தெரிய வந்துவிட்டது. இதையடுத்து பலரும் சவுத் குயினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
லண்டன் ஏன்?
புதுப்பட ஷூட்
பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கும் சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா கிருஷ்ணன். அந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் துவங்கியிருக்கிறது. அதற்காக தான் த்ரிஷா லண்டனில் இருக்கிறார். ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கும் முதல் தமிழ் படத்தில் ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏர்லிஃப்ட், ஷெஃப் உள்ளிட்ட இந்தி படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ணா மேனன் முதல் முறையாக சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இந்த படம் மூலம் கோலிவுட் வந்திருக்கிறது பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம்.
த்ரிஷா அறிவிப்பு
தான் நடிக்கும் படத்தின் அறிவிப்பை இன்ஸ்டா ஸ்டோரியில் தற்போது தெரிவித்துள்ளார் த்ரிஷா கிருஷ்ணன். அதை பார்த்த ரசிகர்களோ புது துவக்கத்திற்கு மனதார வாழ்த்துகிறோம். இது மாதிரி ஒரு படத்தில் த்ரிஷாவை பார்ப்போம் என எதிர்பார்க்கவே இல்லை. தலைவி புதுப் புது ஜானர்களை முயற்சி செய்கிறார். உங்களின் இந்த புது முயற்சி வெற்றி பெறட்டும். நீங்கள் ராஜா கிருஷ்ணா மேனன் படத்தில் நடிப்பதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லையே. வாவ், ரகசியம் காப்பதில் வல்லவராக இருக்கிறீர்களே தலைவி என்கிறார்கள் த்ரிஷா கிருஷ்ணன் ரசிகர்கள்.
த்ரில்லரில் த்ரிஷா
மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாராம் த்ரிஷா என்று தான் பேச்சாக உள்ளது. இந்நிலையில் அவர் இப்படியொரு படத்தில் நடிக்க ஆரம்பித்திருப்பது ரசிகர்களுக்கு புது தகவலாக இருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து சூர்யா உடன் சேர்ந்து த்ரிஷா நடித்த கருப்பு படம் மே மாதம் ரிலீஸாகி ரூ. 340 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டரானது. அந்த வெற்றிக்கு காரணம் த்ரிஷா எனும் லக்கி சார்ம் தான் என அவரின் ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் த்ரிஷாவை மையமாக எடுக்கப்படும் அந்த த்ரில்லர் படம் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பிவிட்டது.
