கட்கரியின் எத்தனால் கலப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு

மத்திய அமைச்சர்களை கிண்டலடிக்கும் மீம்ஸ் 

பிரதான் பதவி விலகியதை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராகவும், இணையத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளைஞர்கள், அவரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது எத்தனால் கலப்பு திட்டத்தை கைவிடவேண்டுமென்ற கருத்துகள் மற்றும் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அமித்ஷாவும் பதவி விலக ராகுல் வலியுறுத்தல் 

தர்மேந்திர பிரதானை போலவே அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவியதற்கு முழுபொறுப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் மீண்டும் மெட்ரோ சேவை 

தலைநகர் டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், தலைநகரில் இயல்புநிலை திரும்பி வருவதால், மெட்ரோ ரயில் சேவைகளும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.

Source link