புதுடில்லி: நாட்டின் முக்கிய கட்டமைப்பு துறைகளில், உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு ஜூனில் 1.10 சதவீதமாக இருந்த, கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, இந்த ஆண்டு ஜூனில், 5 சதவீதமாக உயர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இது, 3.20 சதவீதமாக இருந்தது.
நாட்டின் முக்கிய கட்டமைப்பு துறைகள் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில், 2011 – 12ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு வெளியிட்ட தரவுகள், அண்மையில் 2022 – 23ம் ஆண்டு அடிப்படையாக மாற்றி அறிவிக்கப்பட்டது. அதோடு, துறைகளின் எண்ணிக்கையும் இரும்புத்தாது சேர்க்கப்பட்டு ஒன்பதாக அதிகரிக்கப்பட்டது.
அண்மையில் சேர்க்கப்பட்ட இரும்புத்தாது துறையின் உற்பத்தி, கடந்த ஜூனில் 43.90 சதவீதம் உயர்வு கண்டது தான், கட்டமைப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்க முக்கிய காரணமானது.
