மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ‘எக்சிகியூட்டிவ் விஸ்டாடோம்’ ஏசி பெட்டி அறிமுகப்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளை பயணிகள் கண்டு ரசித்து, தங்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த சிறப்பு பெட்டி அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கண்ணாடியிலான மேற்கூரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா புல்லட் ரயில் எல்லாம் இங்கிட்டு வரவே முடியாது; ட்ரெயின்ல 5 ஸ்டார் ஹோட்டலா? இந்தியாவின் மாஸ் லுக்
விரிவாக்கப்பட்ட ரயில் சேவை
இந்த சிறப்பு சேவை வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தற்காலிகமாக இயக்கப்படும். அதன்படி வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்த சேவை கிடைக்கும்.
ரயில் எண் 16327 (மதுரை – குருவாயூர்): மதுரை – குருவாயூர் பாதையில் இயங்கும் இந்த ரயிலில் அக்டோபர் 22 முதல் விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படும்.
ரயில் எண் 16328 (குருவாயூர் – மதுரை): மறுமார்க்கமாகத் திரும்பும் ரயிலில் அக்டோபர் 23 முதல் இந்த சேவை தொடங்குகிறது.
கேரள வழித்தடத்தில் முதல்முறை
கேரளா வழியாக இயங்கும் ஒரு ரயிலில் இது போன்ற ‘விஸ்டாடோம்’ பெட்டி இணைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். ஆர்யன்காவு உட்பட, மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டமான செங்கோட்டை – புனலூர் மலைப் பாதையின் மனதை மயக்கும் இயற்கை அழகை பயணிகள் அருகில் இருந்து கண்டு களிப்பதற்கான அரிய வாய்ப்பை இந்த சேவை வழங்குகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே மதுரை டிவிஷன் வெளியிட்டுள்ள பதிவில், “இயற்கை எழில் கொஞ்சும் பயணங்களுக்கான ஒரு புதிய ஜன்னல்!
தெற்கு ரயில்வே, தனது முதலாவது ‘விஸ்டாடோம்’ பெட்டியை மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 22 அக்டோபர் 2026 முதல் சோதனை முறையில் அறிமுகப்படுத்துகிறது. சுற்றிலும் பரந்த அழகிய காட்சிகளையும், மேம்படுத்தப்பட்ட பயண அனுபவத்தையும் கண்டு மகிழுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
🚆 A new window to scenic journeys! 🌄 Southern Railway introduces its first-ever Vistadome Coach on the Madurai–Guruvayur Express on a trial basis from 22 Oct 2026. Experience panoramic views and enhanced travel comfort! #SouthernRailway #VistadomeCoach #Madurai #RailTourism https://t.co/jOVmziSzlx
— DRM MADURAI (@drmmadurai) October 18, 2026
திருவனந்தபுரம் டிவிஷன் வெளியிட்டுள்ள பதிவில், “விஸ்டாடோம் வைப்-ஐக் கண்டு மகிழுங்கள்!
மதுரை- குருவாயூர்- மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலின் எக்சிகியூட்டிவ் விஸ்டாடோம் ஏசி பெட்டியில் பயணித்து, செங்கோட்டை – புனலூர் மலைப் பாதையின் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகை அனுபவிக்க தயாராகுங்கள்.
ரயில் எண். 16327 | மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ்
வியாழன் முதல் ஞாயிறு வரை | 22 அக்டோபர் 2026 முதல் 15 ஜனவரி 2027 வரை
ரயில் எண். 16328 | குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ்
வெள்ளி முதல் திங்கள் வரை | 23 அக்டோபர் 2026 முதல் 16 ஜனவரி 2027 வரை
View the Vistadome Vibe! Get ready to experience the breathtaking beauty of the Sengottai–Punalur Ghat section in the Executive Vistadome AC coach on the Madurai-Guruvayur-Maduruai Express. Train No. 16327 | Madurai–Guruvayur Express Thursdays to Sundays | 22 October 2026 to 15 January 2027 Train No. 16328 | Guruvayur–Madurai Express Fridays to Mondays | 23 October 2026 to 16 January 2027 Book your tickets to experience #WesternGhats through Expansive glass windows leaning back in Executive Chair Car seats. #TVCSR #SouthernRailway #IndianRailways #Vistadome #SengottaiGap
— DRM Thiruvananthapuram (@drm_tvc) October 18, 2026
எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளில் சாய்ந்தவாறே, அகலமான கண்ணாடி ஜன்னல்கள் வழியே மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்க இன்றே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளது.
