கனமழை எதிரொலி – முதல்வர் விஜய் வெளியிட்ட உத்தரவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் நள்ளிரவு முழுவதும் விடாமல் பெய்து வந்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இதே கனமழை அடுத்து 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணிப்பேட்டையில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் கனமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக கடந்த ஆகஸ்டில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை தற்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மற்றும் மீட்பு பணி மேற்கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் மீண்டும் சென்னை வர அறிவுறுத்தியிருக்கிறார். சென்னைக்கு வர முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருக்கிறார். இதில் பொதுப்பணி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார்.  பொறுப்பு அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு; 

திருவொற்றியூர் , மணலி ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் ரமேஷும் , மாதவரம் தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வனும், ராயபுரம் , திருவிக மண்டலங்களுக்கு அமைச்சர் அருண் ராஜூம் , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு  அமைச்சர் விஜய பாலாஜியும், கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு  அமைச்சர் பிரபுவும், ஆலந்தூர், அடையார் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனும், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் விக்னேஷும்   ஆகியோர் ஆவர்.